Online Resources to help during Covid-19

Featured

Tags

Wow! I see I haven’t been active on my blog since 2017. Seriously!!

Being into Consulting, my last few years have been terribly busy with moving between different jobs, travelling and all.

With Covid-19 taking the world by storm now, I am remote working from home during the month or so. While staying close with the family now I see there are several resources to help the family members that include kids, adults on various content to help keep them busy while staying safe at home.

Below are my findings from various sources that I am going to publish here during the next few weeks.

http://www.wfhmanual.com
https://classroommagazines.scholastic.com/support/learnathome.html
https://www.brainpop.com/
https://www.tynker.com/
https://outschool.com/
https://www.udemy.com/
https://learnathome.withyoutube.com/
https://beastacademy.com/
https://www.khanacademy.org/
https://www.creativebug.com/

YouTube Channels:
https://www.youtube.com/user/crashcoursekids
https://www.youtube.com/user/ScienceChannel
https://www.youtube.com/user/scishowkids
https://www.youtube.com/channel/UCXVCgDuD_QCkI7gTKU7-tpg
https://www.youtube.com/user/watchfreeschool
https://www.youtube.com/channel/UC8HYERScBt-e0kV0fpe0asg
https://www.youtube.com/user/thebrainscoop
https://www.youtube.com/channel/UC7EFWpvc1wYuUwrtZ_BLi9A
https://www.youtube.com/user/GeekGurlDiaries
https://www.youtube.com/user/comaniddy
https://www.youtube.com/channel/UCbprhISv-0ReKPPyhf7-Dtw
https://www.youtube.com/user/soulpancake

Please stay safe, while having fun with your close family from inside your home.

More coming……

அஞ்சறை பெட்டி

ரேவதி பால் எடுக்க ஃப்ரிட்ஜ்ஐய் திறந்தாள். இது சனிக்கிழமை. மகன் கார்த்திக் மற்றும் மகள் மீரா தங்கள் அறைகளில் தூங்கிக் கொண்டிருந்தபோது கணவர் சரவணன் இன்னும் மாஸ்டர் பெட்ரூமில் தூங்கி கொண்டிருந்தார் .

அவள் ஒன் பெர்ஸன்ட்  மில்க்கை  அடுப்புக்கு அருகில் வைத்து கீழிருந்த ஷெல்ப்ஃஐ திறந்து பால் பாத்திரத்தை எடுத்தாள். பாத்திரத்தில் பாலை ஊற்றியதும் வெள்ளை தண்ணீரை ஊற்றியது போல தெரிந்தது. அடுப்பை பற்ற வைத்து மணி பார்த்த போது  7.15 என காட்டியது.

கடந்த வாரம் அந்த 1500W மைக்ரோவேவ் அடுப்பிலிருந்து விடுபட்ட பிறகு, சமையல் அறையில் அந்த மூலை இப்போது பெரிதாகத் தெரிந்தது. உணவை சூடாக்க மைக்ரோவேவ் பயன்படுத்துவதால் ஏற்படும் ஆபத்தான விளைவுகள் குறித்து சரவணனிடம் பல மாதங்கள் சொன்ன பிறகு, இறுதியாக அதைத் தூக்கி எறியலாம் என்றார். என்னவோ மாரேஜ்க்கு எங்க வீட்டுல கொடுத்த சீதன சாமான் போல அத விட மாட்டேன் பேர்வழின்னு ஒத்த கால்ல நின்னுக்கிட்டுருந்தார் மனுஷன்.

உள் முற்ற கதவை லேசாக திறந்து வெளி காற்றை வர செய்தாள். சரவணன் வேலை காரணமாக 3 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் சிகாகோ அருகில் இருக்கும் நேபர்வில் பகுதிக்கு குடி புகுந்தார். 6 மாதங்களுக்குப் பிறகு, ரேவதியும் குழந்தைகளுடன் சேர்ந்து கொண்டனர். ஒரு வருடத்திற்குள் பசுமையான மரங்கள் அடர்ந்திருந்த சுற்றுப்புறசூழலில் இந்த அழகிய புதிய வீட்டை கட்டுமுன்பே வாங்கி தங்களுக்கு ஏற்றவாறு வடிவமைத்துக்கொண்டனர் .

ரேவதி இந்த வீட்டை மிகவும் விரும்பினாள். கொல்லைப்புறத்தில் உயரமான மரங்கள் மற்றும் தாவரங்கள் இருந்தது மனதிற்கு மிகவும் புத்துணர்ச்சியாக இருக்கும். மேலும் வீட்டிற்குள்ளே தொட்டியில் கருவேப்பிலை, துளசி, கற்பூரவல்லி, மல்லி போன்ற பல வகையான இந்திய வகை செடி கொடிகளை வளர்த்து வந்தாள்.

வசந்த காலம் இப்போதுதான் துளிர்த்து வேலையில் காலை கதிரவன் எட்டி ரேவதியை பார்த்து ஒளிர்ந்து கொண்டிருந்தான். ஒரு நீண்ட பெருமூச்சுடன் மீண்டும் கதவை மூடிவிட்டு அருகில் இருந்த முக்காலியில் உட்கார்ந்தாள்.

வெளியே அணில் ஜோடியாக துரத்தி ஓடிக்கொண்டிருந்தது, பறவைகள் சிறகுகளை ஒய்யிரமாக சிறகடிக்க, வெயிலில் பளபளக்கும் புல் மீது பனி வார  இறுதி தொடங்குவதற்கு சரியான சூழலை உருவாக்கிக் கொண்டிருந்தது.

கோயம்புத்தூரில் உள்ள  தொண்டமுத்தூரில் குழந்தையாக வளர்ந்த நாட்கள் அவள் நினைவை வருடியது. ஹ்ம்ம்! எவ்வளவு சிறந்த நாட்கள் அவை. அம்மா அவளை எழுப்பும்போது குளித்து நெற்றியில் பெரிய பொட்டை வைத்து அழகாக காட்சி தரும்போது அதை ரசிப்பதா இல்லை ஒரு அம்மாவுக்கே உரித்தான அந்த அழகிய நறுமணத்தை ரசிப்பதா என்றே தெரியாது

என்னடி, இப்போதான் எழுந்திருப்பியா? கோழி கூவி ரெண்டு மணி நேரம் ஆகுது. மகாராணி தெனமும் இப்படி எழுந்திருச்சா போற வீட்டுல என்ன பாத்து என்ன சொல்லுவாங்க. ஒரே பொண்ணு, அத ஒழுங்கா வளக்க தெரியல. பாரு நல்லா பாசம் கொடுத்து கெடுத்து வெச்சிருக்காங்க.

உனக்கு வேற வேலையா இல்லையே, பொண்ணு வார கடைசிலையும் நல்ல தூங்க விடமாட்டே!

ரேவதியின் ஆதரவுக்கு அப்பா வந்தார். அப்பா சேதுமஹாலிங்கம். சுகர்க்கேன் பிரீடிங் இன்ஸ்டிடூடில் வேலை பார்த்துட்டு இருந்தார்.  வந்த சம்பளத்த சேமிச்சு வெச்சி இந்த வீட்டை மாடெர்னா கட்டுன அதே சமயம் நட்ட நடு வீட்டுக்குள் வெளிச்சம் வரும் முற்றமும் சமையல் அறையை பாரம்பரியமான முறையில் வெக்கணும்னு பாத்து பாத்து கட்டியிருந்தார்.

மிக்சி, எரிவாயு அடுப்பு மெதுவாக ஒவ்வொரு வீட்டிலும் புகுந்து கொண்டிருந்த வேளையில் அவர் அந்த வாழ்க்கை முறைக்குள் செல்ல பிடிவாதமாக இருந்தார். அம்மா சொல்லவே வேணாம், அப்பாவுக்கும் அம்மாவுக்கும் எதுல பொருத்தம் இருக்கோ இல்லையோ சாப்பாடுன்னு வந்தா  ரெண்டு பேருக்கும் பத்து பொருத்தம்.

காலங் காத்தால நல்ல பில்டர் ஃகாபி குடிச்சுட்டு இந்த மனுஷன் இதையும் பேசுவார், இன்னமும் பேசுவார்.

இவளுக்கு போற வீட்டுல நல்ல தூங்கிட்டுருந்தா புருஷன் ஒதச்சுதான் காபி கேட்பார். வீட்டுக்காரர் கைல காத்தால முதல் வேலையா ஒரு மணமான காபி கொடுத்தா அந்த நாள்ல பாதி நல்லா  இருந்த மாதிரிதான். என்ன நான் சொல்றது!

எங்கள் சமையலறை அப்போது மிகப் பெரியதாக இருந்தது, மரக் குச்சிகள் மற்றும் கரியுடன் ஒரு பெரிய அடுப்பு இருக்கும். அவளுடைய அம்மா அதாவது என் அம்மம்மா கொடுத்த செம்பு அஞ்சறை பெட்டி மூலையில் ஆட்டுக்கல்லும், அம்மிக்கல்லும் இதோ நாங்க ரெடி, நீங்க ரெடியான்னு கேட்டுட்டு இருக்குற மாதிரி இருக்கும். இந்த இடமே அம்மாவின் தர்பார்.

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்!

பாத்திரத்தில் இருந்து பால் பொங்கிய சத்தத்தில் மீண்டும் நினைவுக்கு வந்தாள் ரேவதி. அடுப்பை அனைக்க சமையலறைக்கு ஓடினாள். பால் இவ்வளவு நேரம் சுட்டு கீழே கொட்டுகிறது ஆனா ஒரு ஸ்மெல்லும் வராம எதோ தண்ணிய சுட வெச்ச வாசனை மட்டும் தான் வருது.

பரவாயில்லை. வாசணை உணர முடியது. எங்க கொரோனா வந்துச்சோன்னு பார்க்கறீங்களா. நம்ம பாரம்பரியமான சத்து உணவை சாப்பிட்ட உடம்புங்க. சும்மா தெறிக்க விடமாட்டோம் கொரோனவ!

இதே நம்ம ஊரு பால்கார முருகேச தாத்தா தலைல டவல கட்டிட்டு விடிய காலையில் சைக்கிளை உருட்டிக்கிட்டு வந்து “அம்மா பால்னு” கூப்பிட்டு சும்மா நுரை தளும்ப பசும் பால் எடுத்து பாத்திரத்துல ஊத்தி அத அம்மா கட்ட அடுப்புல வச்சி கொதிச்சதும் பக்கத்துல இருக்குற சின்ன ஸ்டீல் டப்பாவில் இருந்து புரூக் பாண்ட் பில்டர் காபி போட்டு, வெள்ளை வெளேருன்னு இருக்குற சீனியை போட்டு காபி கொடுப்பாளே!

அப்பப்பா! அப்பா முகத்த பாக்கணுமே, இந்த உலகத்துல இதுக்கு மேல வேற என்ன வேணும்? அது சரி, இங்க இந்த வெள்ள தண்ணியத்தான் பாலுன்னு சொல்லிட்டு இங்க எல்லாம் குடிக்கிறோம். எதோ காலை கடனுக்கு.

ஷெல்ப் திறந்து காபி ஜார் எடுக்கும் போதுதான் ப்ரு காபி தீர்ந்து விட்டது தெரிந்தது. ஐயோ!  இதுவும் நமக்கு குடுத்து வைக்கலையே. நாடி நரம்புக்குள்ள இருக்குற புத்துணர்ச்சியெல்லாம் இந்த காபி நம்பி தான் இருக்கே!

வால்மார்ட்டில் சில நாட்களுக்கு முன்  வாங்கிய ஃபோல்ஜர்  காபியின் சிறிய ஜாடியை கண்டுபிடித்து அதை பாலில் கலந்தாள். முதலில் கடைக்கு சென்று ப்ரு காபியை வாங்க வேண்டும், இல்லைனா சரவணன் என்னை பிழுஞ்சு எடுத்திடுவார். எனக்கே  பைத்தியம் பிடிச்சாலும் ஆச்சர்யப்படமாட்டேன் .

பிரவுன் சுகர எடுத்து காபியில் கலந்து, அடுப்பு அணைக்கப்பற்றிருக்கிறதா என்று பார்த்து மீண்டும் சோபாவில் வந்து உட்கார்ந்தாள். டிவியை மாற்ற ரிமோட்டை எடுத்தாள். அடுத்த 5 நாட்களுக்கு உள்ளூர் வானிலை செய்தி, சில விபத்துக்கள் மற்றும் பிற விஷயங்களைப் பற்றிய செய்திகள் வந்தன. முக்கியமானது எதுவுமில்லை,

ரேவதி டிவியை அணைத்துவிட்டு ரிஃலைனர் சோபாவில் காலை நீட்டி கண்களை மூடிக் கொண்டாள். பழைய நினைவுகளை தீண்ட தூண்டியது மனது.

அடுப்புல ஆவி பறக்க இட்லி பாத்திரம் இருக்க, அம்மா அத திறந்தவுடன் வருமே ஒரு வாசனை, அட! அட!

இந்த மல்லிப்பூ இட்லிக்கு ஒரு வாசனை இருக்குதுனு அமெரிக்கா வந்த பிறகுதான் அதோட அருமை தெரியுது. இங்க கிடைக்குற அரிசி உளுந்துல  மாவு அரைச்சா இட்லி வெள்ளைய உருண்டையா கல்லு மாதிரி   இருக்குது, ஆனா எதோ ஒன்னு குறையிற மாதிரி இருக்கு.

அம்மி கல்லுல பச்சை மொளகாவோட தேங்கா, கொஞ்சம் பொட்டு கடலை, கல்லு உப்பு, புளி சேர்த்து சிறுவாணி தண்ணிய கொஞ்சம் தெளிச்சி சட்னி அரைச்சு அதுல நெய் ஊத்தி இட்லியோட சாப்பிட்டா….

இருங்க இருங்க, அதுக்குள்ள வாய் ஊறுதுன்னு ஜொள்ள தொடைக்கிற மாதிரி இருக்கு, பரவாயில்ல விடுங்க, இதெல்லாம் அனுபவிக்கனும்!

மறுபடியும் பாக் டு நம்ம ஊரு கதைக்கு வருவோம்.

பாட்டி வடை சுட்ட கதையை மட்டும் தான் கேட்டுருக்கேன், ஆனா எங்க அம்மா அந்த இட்லி இல்லாத நாளுல மணக்க மணக்க நெய் மிதக்க பொங்கல் வடை சட்னி சாம்பார் செஞ்சாங்கன்னா பாட்டி வடை சுட்ட கதையெல்லாம் பக்கத்திலேயே வராது. அப்படி ஒரு ஆனந்தம்.

அத சாப்பிட பிறகு அப்பாவோட சேந்து எனக்கு கண்ணு காட்டும் பாருங்க!

அய்யோயோ!

வடைன்னு நெனைச்சொன்னதான் பருப்பு வாங்கணும்னு நினைப்பு வருது. நாளை கார்த்திக்கின் பிறந்த நாள், எனவே வீட்டில் ஒரு சிறிய பர்த்டே பார்ட்டிக்கு  திட்டமிட்டுள்ளோம்.

நண்பர்கள் அவர்களின்  குட்டீஸுடன் வருவார்கள். மீராவின் சென்ற பிறந்தநாள் விழாவில் பீட்சா  மற்றும் சாலட் மட்டுமே இருந்ததால் இம்முறை  தென்னிந்திய உணவு மட்டுமே. ஒரு கை பார்க்கனும்னு போல இருந்தது.

சிறு வயதில் கல்லை கொடுத்தாக்கூட கவலையே இல்லாம கடித்து நொறுக்குற நாம அப்பா அம்மா என்ன கொடுத்தாலும் சாப்பிட்டுக்கொண்டிருந்தோம். அவங்க கொடுத்தது எல்லாமே நம்ம ஊரு பாரம்பரியமான உணவே.  பல்வேறு வகையான எண்ணெய், மைதா, இனிப்பு, அரிசி, GMO/non-GMO, இயற்கை உணவு, ஃசீஸ் எதை பற்றியும் நினைத்து கூட பார்த்ததில்லை. 

நம்ம ஃபில்டர் காபி, இட்லி, பொங்கல் வடை பத்தி சொல்லவே இவ்வளவு நேரம் ஆகுதுன்னா மதிய ஃபுல் மீல்ஸ், சாய்ங்கால நொறுக்கு தீனி சுட சுட இஞ்சி மசாலா டீயோட இரவு சிற்றுண்டி வரைக்கும் சொல்லனும்னா இந்த கதை பத்தாதுங்கோ.

அம்மா! 

அம்மாஆ !!

ரேவதி நினைவுக்கு வந்தாள்.

நேற்று இரவு ஃப்ரைடே வீகென்ட்  மூவி பார்த்து நீண்ட தூக்கத்திற்குப் பிறகு மீரா கண்களைத் துடைத்துக்கொண்டே ரேவதி அருகில் வந்தாள். கார்த்திக்கும் சரவணனுக்கு இன்னும் அமெரிக்க கோழி கூவ சிறிது நேரம் ஆகும்.

அம்மா, மார்னிங்  என்ன பிரேக்பாஸ்ட்? 

தயவு செய்து இட்லி, தோசை, உப்மா, சப்பாத்தி, பூரி, பொங்கல்னு சொல்லாதே… பட்டியல் தொடர்ந்து கொண்டே இருந்தது.

ரேவதி, “ஏண்டி இதுக்கு மேல நான் என்னதான் செய்யறது. நீயே அதையும் சொல்லிடு.

மாம், ஜஸ்ட் மேக் பாஸ்தா!

இந்த நாள்

“குட் மார்னிங் ஸ்டூடெண்ட்ஸ்” என்று அறிவியல் வகுப்பின் முன் நின்று பத்ரிநாத் புன்னைகைத்தார். பத்ரிநாத் சென்னை பெரம்பூரில்  உள்ள டான்போஸ்கோ பள்ளியில் புதிதாக சேர்ந்துள்ள அறிவியல் ஆசிரியர். பல வருடங்களாக அமெரிக்காவில் வேலை செய்துவிட்டு சிறிது காலம் முன்னர் தனது பூர்விகமான சென்னைக்கு குடும்பத்துடன் தற்காலிகமாக குடிபெயர்ந்தவர். வயது ஆக ஆக மிச்சிகன் குளிர் போர் அடிக்க  அமெரிக்காவில் வேறு எங்கும் செல்ல மனமின்றி தாய்நாட்டிற்கு சில காலம் இருக்க இது சரியான சந்தர்ப்பமாக இருக்கும் என்று முடிவு செய்தார்.

ஒரு சிலர் “குட் மார்னிங்” என்று முணுமுணுத்தார்கள். காலை ஏழு மணி மற்றும் அந்த பள்ளியாண்டின் முதல் வகுப்பு என்பதாலும் அவர் ஆச்சரியப்படவில்லை.

“Welcome to science,” என்று அவர் தொடர்ந்தார். 52 வயது ஆனாலும் அவருடைய ஜிம் பாடியை கட்டுக்குள் வைத்திருந்தது அவருடைய Levi பிராண்ட் ஜீன்ஸ் மற்றும் Van Heusen  ஷர்ட்டும் . 

உங்கள் அனைவருக்கும் நல்ல விடுமுறை கிடைத்து இருக்கும் என்று நம்புகிறேன். என் பெயர் பத்ரிநாத். உங்கள்அறிவியல் ஆசிரியர் திருமதி உஷா தன்னுடைய குழந்தைப்பேறுக்காக விடுமுறையில் சென்றிருக்கிறார். ஆகவே இந்தஆண்டில் நான் தான் உங்கள் புதிய அறிவியல் ஆசிரியர். வகுப்பைத் தொடங்குவதற்கு முன் ஏதேனும் கேள்விகள்இருக்கிறதா? ” 

தமிழ்நாட்டில் தேர்தல் முடிந்து இப்போதான் எல்லாம் அடங்கியிருந்த நிலையில் பள்ளிக்கூடம் முழுவதும் புதிய வண்ணங்களால் பெயிண்ட்  அடித்திருந்தனர். சென்னையின் வெட்பம் தாளாமல்  பள்ளியில் முதல் நாளாகவும் இருப்பதால்  மாணவர்கள் அந்த புது வாசத்தை ரசித்த வண்ணம் தாங்கள் விடுமுறையில் செய்த, பயணித்த, இன்ப, சோக கதைகளை பற்றி பேசிக்கொண்டிருந்தனர்.  திடீரென்று வகுப்புக்குள் நுழைந்த  இந்த புதிய ஆசிரியர் பேசியதை கேட்டு அமைதியாகஇருந்தனர். 

முகத்தில் புன்சிரிப்போடு “கவலைப்படாதீங்க! இன்னிக்கு நான் கிளாஸ் எடுக்கப்போறதில்லை. என்ன பத்தியும் நான் என்ன வேலை செஞ்சிட்டு இருந்தேன் என்றும் பேசுவோம். அதே சமயம் உங்கள பத்தியும் தெரிஞ்சிக்கலாம்னு நினைக்கிறன். 

சிறு சலசலப்புடன் மாணவர்கள் பெருமூச்சு விட்டது நன்றாக கேட்டது.

I used to live in US, Michigan. நான் அமெரிக்காவில் மிச்சிகனில் வசித்து வந்தேன். ஐ ஹவ் மை வைப் அண்ட் 2 சன்ஸ். மூத்தவன் கம்பெனியில் வேலை செய்து கொண்டிருக்க சமீபத்தில் திருமணம் முடிந்தது . சின்ன மகன் கல்லூரியில் 2 வது ஆண்டில் இருக்கிறான். கல்லூரி பரிமாற்ற திட்டம் மூலம் தற்போது லண்டனில்  தங்கி படித்து வருகிறான். நான் சைபர் பாதுகாப்பு நிறுவனத்தில் பணிபுரிந்தேன், அங்கு சைபர் வார்ஃபேர் மற்றும் அச்சுறுத்தல்கள் குறித்த ரிசெர்ச் செஞ்சிகிட்டு இருந்தேன். 

அமெரிக்காவில் நீண்ட காலமாக ஒர்க்கிலேயே பிஸியாக இருந்ததால் இங்க வர முடியவே இல்ல. பசங்க பெரியவங்க ஆயிட்டதுனால் நானும் என் மனைவியும் சென்னைக்கு வந்து எங்கள் பழைய நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் ரெண்டு வருஷம் நேரம் செலவிட முடிவு செஞ்சிருக்கோம். அட் தி சேம் டைம், இணைய பாதுகாப்பைப் பற்றி ஒரு ஆராய்ச்சி வசதியை இங்கு உருவாக்க விரும்புகிறோம், இது உங்கள மாதிரி மாணவர்களின் வாழ்வாதாரங்களில் அதன் விளைவுகளை வெளிச்சம் போட்டு காட்ட  உதவ முடியும்னு நினைக்கிறோம்.

என் மனைவியும் அதே தொழிலைச் சேர்ந்தவர். ஸோ இந்த புதிய வேலையில் நாங்கள் இருவரும் ஒரே நேரத்தில் சில புதுமையான யுக்திகளில் கவனம் செலுத்தவுள்ளோம்.  இந்த டிஜிட்டல் சகாப்தத்தில் சயின்ஸ் எவ்வாறு உருமாறப்பெற்றுள்ளது என்பதை என்னுடைய அனுபவம் மூலம் மாணவர்கள் புரிந்துகொள்ள  இங்கே இப்போ சேர்ந்திருக்கிறேன், எனது மனைவி புதிய கம்பெனி ஆரம்பிப்பதற்கான வேலைகளை  பார்த்து வருகிறாள் .  

சரி, கேள்விகள் ஏதும் இல்லை என்றால், நான் இன்றைய அட்டெண்டன்சை பதிவு செய்ய போறேன்.  “நான் உங்க  நேம் கூப்பிடும்போது, ‘யெஸ் சார்’ என்று சொல்லுங்க, சரியா?” 

அரவிந்த்? யெஸ் சார்..

அண்ணாமலை? யெஸ் சார்

பாரதி! “யெஸ் சார், அண்ட் வெல்கம் டு அவர் ஸ்கூல் சார்”

நன்றிங்க பாரதி!

திவ்யா? யெஸ் சார்!

நான் விக்ரம். மனதிற்குள் நினைத்துக்கொண்டேன். என் பேர் கூப்பிடும்போது கையை மட்டும் தூக்கலாமா இல்ல, யெஸ் சார் சொல்லலாமா ?

இந்த புது வாத்தி அமெரிக்கால இருந்து வந்துருக்கார். நாம என்னடானா இப்போதான் அமிஞ்சிக்கரையவே தாண்டி வியாசர்பாடிக்கு வந்துருக்கோம். இந்த ஸ்கூல்ல சேர்ந்தாதான் வாழ்க்கையே உருப்படும்னு என் அப்பா நினைச்சி சேர்த்துவிட்டுருக்கார்.  

இவர் ரொம்ப வருஷம் அங்க வேலை செஞ்சிட்டு தமிழ் கொஞ்சமாவும் இங்கிலிஷ் நிறையவும் சும்மா நம்ம “தல” ரேஞ்சுக்கு பேசுறார். என்னோட குரல கேட்டு இங்லிஷ் வாசமே இந்த பையன்னுக்கு இல்லனு சிரிச்சிடுவாரோ? இந்த பொண்ணுங்கவேற என்ன ஓட்ட போறாங்க.  

நான் ‘உள்ளேன்’ சொன்னா எப்படி இருக்கும்?ஒருவேளை என்ன இத வெச்சி வேற மாதிரி பார்க்க ஆரம்பிச்சிடுவாரோ?  நச்சுனு யெஸ் சார் சொல்லிட்டு உட்கார்ந்துடலாமே, இதுக்கு ஏன் இவ்வளவு கூச்சம்!

இதே கிளாசில் இருக்கும் முதல்  பெஞ்ச் விக்ரம். என்ன பண்ணுவான்னு பாத்தேன். அவனுக்கென்ன! ராஜா வீட்டுகன்னுகுட்டி. சும்மா இங்கிலீஷிலேயே பூந்து விளையாடுவான். இந்த கிளாஸ்சுல இருக்குற பாதி பசங்க பொண்ணுங்க அவனை சுத்தியே இருப்பாங்க. 

இந்த போனில்  மியூட் பட்டன் மாதிரி எதாவது இருந்தா இவர் என் பெயர் வரும்போது, அத தட்டி விட்டு நம்ம பேரு சொல்லி கூப்பிடற குழப்பத்தில் இருந்து தப்பிச்சிக்கலாம்.

ஹரிஷ்? யெஸ் சார்

கார்த்திக்? யெஸ்! என் பின்னால் இருந்து.  அடடா! இவன் எழுந்திருச்சு சொன்னானா இல்ல உட்கார்ந்துக்கிட்டே சொன்னானா, தெரியலையே !!

மதன்? ஹெலோ சார்! வெல்கம்.

தேங்க்ஸ் மதன்.

 ஒபீலியா? “யெஸ் சார் , ஐ யாம் ஹியர்!” அவள் தெளிவாக உரக்க சொன்னாள் .

நான் முகம் சுளித்தேன். சரி, நான் இதே போல் சத்தமாக சொல்ல வேண்டுமா?. நான் நானாக இருக்கணும், கடவுளே! ஏன் என்னை மட்டும் எங்க அப்பா இங்க சேத்து என் உயிர வாங்கறோரோ, தெரியல.

ராகுல்?

நான் அறையைச் சுற்றிப் பார்க்கிறேன். பதில் இல்லை.

ஐயையோ! என்னோட பேரையா கூப்பிட்டார்? நான் கவனிக்காமல் இத பத்தியே யோசனை செஞ்சிகிட்டு இருந்தேனோ? நான் ஒரு முட்டாள் போல இருக்க போறேன்.   

ராகுல் ஆப்சென்ட் சார், என் பக்கத்தில் இருக்கும் குமார் சொன்னான். அப்பாடா !  

“நன்றி குமார், உட்காருங்க” பத்ரிநாத் சொன்னார்   

அடுத்து, ரம்யா?

சரி, அவர் நிச்சயமாக ரம்யா பேரை தான் கூப்பிட்டார் .

கடவுளே, நான் சரியான வகுப்பில் இருக்கிறேனா? அவர் என் பெயரை அழைக்காவிட்டால் என்ன செய்வது? அறிவியலில் பதிவு செய்தது எனக்கு நினைவிருக்கிறது. நான் இன்று காலை எனது அட்டவணையை சரி பார்த்தது நியாபகத்திற்கு சடாலென வந்தது. 

யெஸ் சார்! ரம்யாவின் கீச்சு குரல் ஒலித்தது .

ஆம், நானும் அது மாதிரி மெதுவாக பேசி உட்கார வேண்டியதுதான். இது உண்மையில் பள்ளியின் முதல் நாள். நீங்கள் குழம்பியதை யாரும் ஒரு வருஷம் கழித்து நினைவில் கொள்ள மாட்டார்கள், இல்லையா? 

ரஜினி ? “இதோ,” முணுமுணுத்த ரஜினி.

நம்ம தலைவர் மாதிரி சும்மா கெத்தா  இல்லாமல் மெதுவாக சொன்னான்.

பத்ரிநாத் சுற்றி பார்த்து “எனக்கு கேட்கவில்லை ரஜினி” ஆர் யு ஹியர் ?

ஓ, கடவுளே! எனக்கு பயமாக இருந்தது. நான் அதைச் சரியாக  தெளிவாகப் சொல்லவில்லை என்றால் என்ன செய்வது? 

யெஸ் சார் ! ரஜினி மீண்டும். இந்த முறை சத்தமாக .

“சூப்பர், நன்றி” ரஜினியை பார்த்து பத்ரிநாத் சிரிப்புடன்  கண்ணடித்தார் .

 “ஹ்ம்ம்,” பத்ரிநாத்  மெதுவாக அட்டெண்டன்ஸ் ரெஜிஸ்டெரை பார்த்து “ச ங் க மி தா” 

“அவள் சங்கமித்ரா,” எனக்கு முன்னால் சில வரிசைகள் முன்னாள் இருந்த லட்சுமி கேலியாக தெளிவுபடுத்தினாள். எல்லோரும் அமைதியாக மனதிற்குள் சிரித்தனர்

ஓ, சாரி சங்கமித்ரா. அவள் பெயரை பதிவு செய்தார்.

விக்ரம்?

என் வயிற்றுக்குள் இருந்து குபீரென ஒரு உருளை மேலே வந்தது போல் இருந்தது. கடைசியாக, இது என்னோட பெயரா இல்ல நம்ம கிளாஸ் ஹீரோ விக்ரமா, தெரியாமல் மெதுவாக எழுந்திரிக்க முற்பட….

விக்ரம், “ஹலோ சார், ஹௌ ஆர் யூ? கிளாட் டு ஹவ் யு இன் அவர் கிளாஸ்”

நன்றி விக்ரம். ஐ யாம் கிளாட் டு பி ஹியர் அஸ் வெல். இந்த வருஷம் நீங்கள் அனைவரும் என்னிடமிருந்து புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ள முடியும் என்று நம்புகிறேன்.   

விக்ரம்?

நான் பீதியில் நனைந்தேன். இனி தப்ப முடியாது.

விக்ரம்? மறுபடியும் ஆசிரியர் அழைக்கவே யாரோ ஒருவன் என் பின்னாலிருந்து என் தோளை தட்ட சிலிர்த்து எழுந்தேன்

ஆப்சென்ட் சார்! 

ஐயோ, எங்க போச்சு இந்த  மியூட் பட்டன்! விக்ரம் தன்னுடைய கால் தடதடக்க எதை எதையோ ஹேக் பண்ணுறாங்க நம்ம ஆளுங்க, இந்த பாழா போன பயத்தை போக்க  எதையாவது கண்டு புடிக்க இவருகிட்ட நான் நேரம் கிடைக்கிறப்போ பேசியே ஆகணும். 

மீண்டும் ஒரு முறை “யெஸ் சார்” என்று பெருமூச்சுடன் சொல்லி உட்கார்ந்தான்.

கோடாரி பேய் மனிதன்

Tags

டிங் டாங்! டிங் டாங்! மிகவும் பழைய செங்கல் வீடு, அதன் கூரை மற்றும் கறை படிந்த கண்ணாடி ஜன்னல்கள் தேவாலய கட்டிடமாக மாற்றப்பட்டு பல நூற்றண்டுகள் ஆகியிருந்தது. “பன்னம்” என அழைக்கப்படும் காட்டு ஃபெர்ன்களின்  எல்லையிலுள்ள ஒரு குறுகிய பாதை பிரதான வீதியிலிருந்து அதை நோக்கிச் சென்றது. பள்ளத்தாக்கின் சிறிய சமூகத்தில் அங்கும் இங்கும் சிதறியுள்ள சில கட்டிடங்களில் இது மிகவும் வித்தியாசமாக இருந்தது. 

1958 ஆம் ஆண்டு லாங்யர்பைனில் அமைந்துள்ள ஸ்வால்பார்ட் தேவாலயம். உலகின் வடக்கு திசையில் உள்ள இந்த புதிய தேவாலயம் வந்த பிறகு பழைய தேவாலயத்தை பலரும் மறந்து போயிருந்த காலம். இந்த தேவாலய கட்டிடத்தின் பின்னால்  ஒரு கல்லறை இருந்தது.

தேவாலய உறுப்பினர்கள் இறந்த  பிறகு அங்கு அடக்கம் செய்யப்படுவது வழக்கம். இதற்கெல்லாம் மேல் பலஆண்டுகளுக்கு முன்பு, ஒரு கொலைகாரன் அங்கே புதைக்கப்பட்டதாக வதந்திகள் வந்தபின் உள்ளது. அவன் தன்னுடைய கோடரியால் பலரை கொன்றிருப்பதால் அவனை  “கோடாரி பேய்  மனிதன்” என்று அந்த ஊரில் அழைப்பதுண்டு.

சிலர் இன்னும் முழு நிலவு நாளான பௌர்ணமியன்று பேயாக மாறி கல்லறையிலிருந்து வெளியே வந்து சுற்றித் திரிவதாக நம்புகின்றனர். நள்ளிரவில் அந்த பேய் மனிதன் தன்னுடைய கோடரியைக் கூர்மைப்படுத்துவதைக் கேட்டதாக கூட சிலர்  சொல்லுவர், ஆனால் யாரும் அதை பார்த்ததாக இதுவரை தெரியவில்லை.

ஃப்ரெட்ரிக் புதிய போதகராக சமீபத்தில் தேவாலயத்தில் சேர்ந்தார். ஸ்வீடன் நாட்டில் தனது மனைவி ஷெரினுடன் வசித்து வந்தார். ஸ்வல்பர்டுக்கு புதிதாக வந்திருப்பதால் தற்காலிகமாக தங்குவதற்கு ஒரு வீடு பார்த்துக் கொண்டிருக்கையில்  தேவாலயத்திலேயே தங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  கோடாரி பேய் மனிதன்  வதந்திகளைப் பற்றி அவர்  அறிந்திருந்தார், ஆனால் அத்தகைய மூடநம்பிக்கைகளுக்கு ஒரு கிறிஸ்தவரின் வாழ்க்கையில் இடமில்லை என்று நம்பினார்.

ஸ்வால்பார்ட்டில் கிறிஸ்துமஸ் நேரம் மாயாஜாலமானது. அந்த முதல் சனிக்கிழமையன்று, ஃப்ரெட்ரிக் மற்றும் ஷெரின் தேவாலய உறுப்பினர்களில் ஒருவரால் கிறிஸ்துமஸ் நிகழ்வு மதிய உணவுக்கு அழைக்கப்பட்டிருந்தனர். உணவு சுவையாக இருந்தது, அவர்கள் நிறைய விஷயங்களைப் பற்றி பேசினார்கள். கோடாரி பேய் மனிதனைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? என்று ஒருவர் கேட்டார். அவர் அந்த விஷயங்களை நம்பவில்லை என்று கூறினார். 

அழகான மற்றும் அமைதியான போலார் நைட் ஸ்வால்பார்ட் மீது படர்ந்து கொண்டிருக்கும் வேளையில், ஃப்ரெட்ரி க்ஷெரினுடன் தேவாலயத்திற்கு செல்ல புறப்பட்டார். லாங்கியர்பைனில் உள்ள பிரதான வீதி அலங்காரங்களால்  ஜொலித்துக் கொண்டிருந்தது. மேலும் நார்வே  நிலப்பரப்பில் இருந்து வளர்க்கப்பட்ட கிறிஸ்துமஸ் மரம் வண்ண விளக்குகளால் மின்னி கொண்டிருந்தது. இதுவே ஞாயிற்றுக்கிழமை என்றால், லாங்கியர்பைனில் உள்ள அனைத்து தெருவிளக்குகளும் அணைக்கப்பட்டிருக்கும். ஏனனில் துருவ ஒளி அல்லது ஆரோரா எனப்படும் வட, தென் துருவபகுதிகளில் தோன்றும் ஒரு அபூர்வ ஒளி இங்கு மிகவும் புகழ் பெற்றது. இதை காணவே மக்கள் கூடுவது வழக்கம்

பாஸ்டர் ஃப்ரெட்ரிக் தன்னுடைய படுக்கையறை  மேசையில் அமர்ந்தார். மின்சாரம் இல்லாததால், போதுமான எண்ணெய்  விளக்குகள் இருந்தன. கர்த்தரை பிராத்தித்துவிட்டு உறங்க சென்றார். காலையில் கல்லறையை எதிர்கொள்ளும் ஜன்னல்  வழியாக ஓடும் ஒரு அழகான சூரிய ஒளியால் தூக்கத்திலிருந்து எழுந்தார். ஜன்னலுக்கு வெளியே பார்த்தார். சில கல்லறைகளுக்கு மேல் புதிய பூக்கள் வைக்கப்பட்டிருந்தது அந்த விடியற்காலையில் காண ரம்மியமாக இருந்தது.

யாரோ கதவைத் தட்டினர். கதவை திறந்து பார்த்த போது இளம் பையன் ஒரு கூடை சுமந்து நுழைந்தான்.

காலை வணக்கம் ஐயா! எனது அம்மா உங்களுக்கு சிற்றுண்டி கொடுத்து உள்ளார். அதை கையில் வாங்கிக்கொண்டு அவனுக்கு நன்றி தெரிவித்தார். அன்றைய நாளும் எப்போதும் போல் சென்றது. இரவு ஃப்ரெட்ரிக் மனைவியுடன் சீக்கிரம்  படுக்க சென்றார். நினைத்து பார்த்தால் நாள் அவ்வளவு பரபரப்பாக இல்லை ஆனால் களைப்பாக இருப்பது போல்  தோன்றியது. 

கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் பல்வேறு இடங்களில் நடைபெறுவதால் மக்கள் தங்களுக்கு கிடைத்த நேரத்தில்  ஆலயத்துக்கு வந்த வண்ணம் இருந்தனர். அதுவே தங்களது களைப்புக்கு காரணமாக இருக்கலாம் என்று நினைத்தார். 

கடந்த இரண்டு நாட்களில் பார்வையிட்ட இடங்களைப் பற்றி அவர்கள் அரட்டையடிக்க இன்று இரவு சிறிது நேரம்  கிடைத்தது நிறைவாக இருந்தது. குல்தூர்ஹுசெட்டில் உள்ள பாரம்பரிய கிறிஸ்துமஸ் சந்தை உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் நிலைத்தன்மையின் உணர்வில் விற்கப்பட்டது ஆச்சரியத்தை உள்ளாக்கியது. சில குடும்பங்கள்  இலையுதிர்காலத்தில் மான்களை வேட்டையாடி அதை நன்றாக மசாலா தடவி ஊறவைத்து குளிர்பெட்டியில் சேமித்து வைத்து வருடகடைசியில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் உணவு மற்றும் துணிமணிகளுடன் ஆர்க்டிக் வனபகுத்தியில் இருக்கும்  தங்களது விடுமுறை கேபின்களுக்கு  செல்லுவது அறிந்து தாங்களும் அடுத்த ஆண்டு பின்பற்ற வேண்டும் என்று பேசிக் கொண்டிருந்தனர்.

அதே நேரத்தில், தேவாலயத்திற்குச் செல்லாத பல குடும்பங்கள் இன்னும் இருந்தன, ஏனென்றால் இங்கே பேய் இருப்பதாக அவர்கள் நம்பினர், பயந்தனர்!! கோடாரி கொலைகாரன் சுற்றித் திரிவதில்லை என்று இந்த மக்களை நம்ப வைக்க கர்த்தர் ஒரு வழியைத் திறப்பார் என்று மனதில் ஒரு பிரார்த்தனையுடன் தூங்கிவிட்டார். 

திடீரென்று ஒரு ஊளையிடும் சத்தத்தை கேட்டு ஃப்ரெட்ரிக் எழுந்தார். மணியை பார்த்தால் நள்ளிரவு 12 மணி. ஒரு அனுமான்ஷிய காற்று அடிப்பது போல் உணர்ந்தார். ஜன்னலுக்கு வெளியில் பார்த்தால் கடும் இருட்டாக இருந்தது. இருண்ட மேகங்களுடன் கூடிய புயல் வளிமண்டலம் சந்திரனில் இருந்து எந்த ஒளியையும் மறைத்தது.  தலையணைக்கு கீழ் டார்ச்லைட் இருக்கிறதா என்று சரி பார்த்துக்கொண்டார். அவரது மனைவி சிறுது கூட அசைவில்லாமல் தூங்கிக்கொண்டிருந்தது கண்டு ஒரு புண்வருடும் சிரிப்போடு மீண்டும் படுத்துக்கொண்டார்.

பின்னர் மறுபடியும் அதைக் கேட்டார். யாரோ உலோகத்தைத் துடைப்பது அல்லது ஒரு கருவியைக் கூர்மைப்படுத்துவது போன்ற ஒரு ஒலி. 

ஷெரின், எழுந்திரு! நீ அந்த சத்தத்தை கேட்டாயா?

“என்ன? அறை ஏன் இருட்டாக இருக்கிறது?

வெளியில் கடும் காற்று அடிப்பது போல் உள்ளது. அதனால் மின்சாரம் எந்நேரமும் சென்று விடும் என்று நினைக்கிறேன். கவனமாக கேள்! 

சிலீரென்று காற்றை கிழித்து கொண்டு ஒரு கூக்குரல் ஒலிப்பது கேட்டு ஷெரின் தனது கணவரைப் பிடித்துக் கொண்டார், “அது என்ன?” 

எனக்கு தெரியாது!

கோடாரி பேய் மனிதன் யாரையாவது கொன்றிருக்கலாம், என்று அவள் நகைச்சுவையாக சொன்னாள். 

உனக்கு சிரிப்பாக இருக்கிறது, ஆனால் பேய் உலகம் பற்றி உனக்கு தெரியுமா. அவை இவ்வாறுதான் நள்ளிரவில் சுற்றி கொண்டிருக்கும்! 

“சரி, ஜன்னலுக்கு வெளியே எட்டி அந்த ஒலி என்னவென்று பாருங்கள்.” ஒரு பேய் இருப்பதாக நீங்கள் உண்மையில் நம்பவில்லை, இல்லையா? ‘ஒரு கிறிஸ்தவரின் வாழ்க்கையில் மூடநம்பிக்கைக்கு இடமில்லை’, என்று தன் கணவருக்கு மேற்கோள்  காட்டினார். 

மறுபடியும் அதே சத்தம். இம்முறை ஷெரின் தனது கணவரை ஜன்னலுக்கு வெளியே பார்க்க சொன்னார் .

ஒலி சத்தமாக வந்தது. இந்த முறை ஜன்னலுக்கு அருகில் இருப்பது போல் தோன்றியது. பாஸ்டர் ஃப்ரெட்ரிக் பிரார்த்தனை செய்யத் தொடங்கினார், மனைவியை தனது கைகளில் இறுக்கமாகப் பிடித்துக் கொண்டார். 

திடீரென்று சத்தம் நின்றது. மயான அமைதி நிலவியது.

“ஷ்! ஷ்!” ஷெரின் கிசுகிசுத்தாள். “இப்போது அவன் கோடரி கூர்மைப்படுத்திவிட்டான். எழுந்து கண்ணை மூடிக்கொண்டு தலை தெறிக்க  ஓடுங்கள்! ” அவள் கிண்டல் செய்தாள். 

அவரது கை மனைவியின் உடலைச் சுற்றி உறைந்தது. அவளுடைய உடல் தளர்வானது, விரைவில் சிறிய குறட்டை அவள்  உதடுகளிலிருந்து தப்பித்துக் கொண்டிருந்தது. “ஹ்ம்ம்! இவள் மட்டும்  எப்படி அவ்வளவு எளிதில் தூங்க முடியும்!” 

வெளியே விசித்திரமான சத்தங்கள் நின்றுவிட்டன, பாஸ்டர் ஃப்ரெட்ரிக் அவரது கைக்கடிகாரத்தைப் பார்த்தார். இப்போது அதிகாலை 1:55 மணி. இரவு முழுவதும் மெதுவாக கடந்து சென்றது. மீதமுள்ள மணிநேரங்கள் அனுமதித்த இடைப்பட்ட தூக்கத்தின் போது, ஃப்ரெட்ரிக் பேய்கள் மற்றும் கொலைகாரர்களைக் கனவில் கண்டார். 

ஜன்னல் வழியாக பிரகாசமான சூரிய ஒளி புதிய நாளை வரவேற்றது. ஜன்னலுக்கு வெளியில் பார்த்தார். எவ்வளவு ரம்மியமாக இருந்தது. நேற்று இரவு உண்மையில் நடந்ததா? அல்லது இது ஒரு கனவா?  

காலை உணவுக்குப் பிறகு, ஷெரின் “நேற்றிரவு கேட்ட சத்தத்தை நான் துப்பு துலக்க போகிறேன்.”

பாஸ்டர் ஃப்ரெட்ரிக் எச்சரிக்கையாகப் பார்த்தார், பின்னர் சிரித்தார். உள்ளே எவ்வளவு பீதியடைந்தார் என்பதை மனைவி பார்க்க விரும்பவில்லை. “நேற்றிரவு கோடாரி பேய் மனிதன் நடவடிக்கைகள் குறித்து துப்பு துலக்க போகிறாயா என்  அன்பே?” அவர் தனது குரலை சாதாரணமாக இருக்கும்படி பார்த்துக்கொள்ள கொஞ்சம் சிரமப்பட வேண்டிதான் இருந்தது. 

“ஆமாம், ஃப்ரெட்ரிக், என்னுடன் வாருங்கள்,” என்று ஷெரின் கூறவும்.  ஒன்றாக அவர்கள் கல்லறை நோக்கி வெளியே சென்றனர். அங்கே குளிர்ச்சியாகவும் அமைதியாகவும் இருந்தது. எதுவும் கவலைப்படும்படியாகவும் கலவரப்பட வேண்டியதாகவும் தெரியவில்லை. நிறைய துப்பறியும்  நாவல்களைப் படித்த ஷெரின், கால்தடங்களைத் தரையில் பார்க்கத் தொடங்கினார். 

“பேய்கள் கால்தடங்களை விடாது, அப்படியே விட்டாலும் நேற்று இரவு பெய்த மழையில் அவை அழிந்திருக்கும்.

ஷெரின் கணவரை புறக்கணித்தார். பூமி மிகவும் வறண்ட ஒரு இடத்திற்கு அவர்கள் வந்தார்கள். “இங்கே பாருங்கள்,ஃப்ரெட்ரிக், இங்கே ஒருவித முத்திரை. இது ஒரு குளம்பு அச்சு அல்லவா? ”  

ஃப்ரெட்ரிக் குனிந்து அந்த இடத்தை ஆய்வு செய்தார். “ஆம், இது நிச்சயமாக ஒரு குளம்பு குறி. ஒரு கன்று அல்லது குதிரை போல் தெரிகிறது. 

இதோ! இங்கே இன்னொன்று. வாருங்கள், இதன் பின்னல் சென்று எங்கு முடிவடைகிறது என்று பார்ப்போம், ஷெரின் சொன்னாள்.

சூரியன் இப்போது பிரகாசமாக பிரகாசித்துக் கொண்டிருந்தது, விலங்குகளின் குளம்புகள் தெளிவாகத் தெரிந்தன. அவர்கள் ஒரு சில கெஜம் நடந்த பிறகு ஒரு கழுதை சத்தமிடுவதைக் கேட்டார்கள். அதை அருகிலுள்ள ஒரு புதரில் பார்த்தார்கள். அதன் கழுத்திலிருந்து ஒரு கயிறு தொங்கிக்கொண்டிருந்தது. அதன் உரிமையாளரிடமிருந்து விலகிச் சென்றதாகத்  தோன்றியது.

நேரம் மிகவும் தாமதமாகவே, அவர்கள் வீட்டிற்கு திரும்பி செல்ல முடிவு செய்தனர். இரவில் ‘கோடாரி கொலைகாரன்’ மர்மத்தை தீர்க்கவில்லை என்று ஷெரின் ஏமாற்றமடைந்தாள், ஆனால் அடுத்த முறை அவள் இந்த இடத்திற்கு வரும்போது, விசாரிக்க நள்ளிரவில் வெளியே செல்ல வேண்டியிருந்தாலும் கூட, தான் செய்வேன் என்று சபதம் மேற்கொண்டாள்.

அவர்கள் கட்டிடத்தை நெருங்கியபோது, ஃப்ரெட்ரிக் இன்னும் சில குளம்பு அடையாளங்களை கவனித்தார். இங்குள்ள தரை மிகவும் வறண்டு குளம்பு அச்சுடன் இருந்தது. சற்று நெருக்கமாகப் பார்த்தபோது சில விலங்கு முடிகளைக் கண்டார்.

“ஷெரின்,” அவர் உற்சாகமாக அழைத்தார், அவர் கட்டிடத்திற்குள் நுழைவதற்கு முன்பு, “நான் மர்மத்தை தீர்த்துவிட்டேன். கோடாரி மனிதன் பேய் இல்லை. அந்த கழுதை மழையின் போது சுவர்களுக்கு எதிராக அதன் உடலை தேய்த்துக்கொண்டிருக்கிறது. இங்கே குளம்பு அச்சிட்டுகளையும், சுவரில் சில கழுதை முடிகளையும் கவனித்தபோது ஒரு கருவியின்  கூர்மைப்படுத்துவது போல கேட்ட வித்யாசமான ஒலி. அதுவே இரவு நேரமாக இருப்பதால் மேலும் ஒலியுடன் கேட்கிறது.

எனவே, பயப்பட ஒன்றுமில்லை, ஷெரின் கூறினார். “அதை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.”

“ஆம், அன்பே,” பாஸ்டர் ஃப்ரெட்ரிக் கூறினார். “செய்வோம், ஆனால் இந்த தேவாலயத்தில் பேய் இல்லை என்பதை அவர்கள்  ஏற்றுக்கொள்வதற்கு சிறிது காலம் ஆகும்”. 

நீண்ட நாள் மக்களிடம் இருந்த சந்தேகம் இன்றுடன் முடிவடைந்த திருப்தியுடன் ஃப்ரெட்ரிக் தனது மனைவி ஷெரீனை கட்டி அணைத்தார். 

அன்று மாலை  உள்ளூர் மக்கள் நார்வேயின் அனைத்து பகுதிகளிலிருந்தும் வண்ணமயமான பிராந்திய ஆடைகளை அணிந்து லாங்கியர்பைனின் சாலைகளில் நடந்து கொண்டிருக்க, புகழ்பெற்ற Funktionærmessen உணவகத்தில் கிறிஸ்துமஸ் விருந்து சாப்பிட்டனர்.  இந்த உணவு விடுதியின் பெருமை லாங்கியர்பைன், ஹியோர்த்ஜெல்லெட் மற்றும் லாங்கியர்பிரீன் ஆகியவற்றின் பரப்பளவை அழகாக எடுத்து காட்டும். உணவை முடித்து விட்டு டாக் ஸ்லெடிங்  காண அருகிலுள்ள நிகழ்வுக்கு செல்ல ஆயத்தமாயினர். 

ஸ்வால்பார்ட்டின் பனிப்பாறைகள் உருகிய நீரால் உருவான எண்ணற்ற பத்திகளைக் கொண்டிருக்கின்றன, இது கண்கவர் பனி குகைகளுக்கு வழிவகுக்கிறது. அவர்களுக்கு அதிர்ஷ்டவசமாக இவற்றில் சிலவற்றை நாளை பார்வையிட டாக்ஸ்லேட்டில் மட்டுமே செல்ல முடியம் என்பதால் இப்போதுள்ள நிகழ்வு மிக்க பயனுள்ளதாக இருக்கும் என்று குதுகூலத்துடன்  செல்ல தொடங்கினர்.

What is Block Chain?

Tags

,

Block Chain!!!!????

Now you have already heard this term in many places with people, colleagues and friends talking about. So what is it really?

I am not going to reinvent the wheel here since its already out there. But I wanted to blog what I have heard and learnt so far on Block Chain, it may help you understand if you have been following me, if not will certainly help me to digest the information for now and in future as this new technology evolves how transactions are done.

More to come…

Trends in Small Business

Tags

I have always had a passion to be my own boss.

While starting my own business, (wow!, 19 years ago!) I didn’t realize how the future will be for me. It was a Internet start-up way back when India was just coming into the shadows of Internet giant. Before I started, I really had a nice hands-on with Internet (Netscape Navigator 🙂 as well setting and configuration of Internet servers and accounts for customers, website creation etc. I even got a chance to setup and configure email to Fax for corporates who were excited to leverage this technology as it came along.

Though I had this only for a year along with a friend of mine and eventually had to wind up due to circumstances, I created another small business again which I had for couple of years this time as part time. I was able to grow myself as well as the business in technology and business front.

With lot of lessons learnt, I decided to go back to workforce full-time with a mindset that I will be back as a boss sometime in future.

Fast Forward, after several years working into consulting, I think this is the time I should invigorate my thoughts.

while doing my research to start a start-up, I came across this great blog/site what will help anyone who is looking as similar to me in starting their own small business.

Small Business Labs

Of course, there are tons of sites and places that can help you in this, but this is a first step for me and probably for you if you have come to my site looking for what I have been looking at. I will blog my findings as I walk through this path

All the Best for myself 🙂 as well as for you in future endeavor.

Create your own website, free on WordPress.com.Create your own website.
Start free